கம்போடியாவின் இராணுவ ஜெனரல் ஹன் மானெட்டை புதிய பிரதமராக அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
ஹன் மானெட் இதற்கு முன்பு 40 ஆண்டு காலம் கம்போடியாவை ஆட்சி செய்த ஹுன் சென்னின் மகன் ஆவார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் ஹுன் சென்னின் கம்போடிய மக்கள் கட்சி நாடாளுமன்ற கீழவையின் அனைத்து இடங்களையும் கைப்பற்றியது.
இதன் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஹுன் சென் தனது மகனிடம் பதவியை வழங்குவதற்காக ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஹன் மானெட் பிரதமராவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
+ There are no comments
Add yours