விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் மனைவி மதிவதினி மகள் துவாரகா ஆகியோர் உயிரோடு இருப்பதாக மதிவதினியின் தங்கை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இது தொடர்பாக 2013-ம் ஆண்டு பேசிய சரத் பொன்ஸ்கா, பிரபாகரனின் மகன் பாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய மனைவி மதிவதினி மகள் துவாரகா ஆகியோர் உடல்கள் போர் முடிவுக்கு வந்த பின்னர் 2009 ஆம் ஆண்டு மே 20 தேதி அவரது உடல் ராணுவத்தினரால் கண்டுபிடித்து மீட்கப்பட்டதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இலங்கை ராணுவமே பிரபாகரன், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பிரபாகரன் இன்னும் உயிருடன் தான் உள்ளார் என்று பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார். அவரது கருத்திற்கு உடனடியாக இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் மனைவி மதிவதினி மகள் துவாரகா ஆகியோர் உயிரோடு இருப்பதாக மதிவதினியின் தங்கை தற்போது தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் மதிவதினி மற்றும் மகள் துவாரகாவை சந்தித்து பேசினேன் என்றும் இந்த செய்தி மக்களுக்கு சந்தோஷம் தரக்கூடியது என்றும் பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
+ There are no comments
Add yours