கிரீஸ் நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் ‘பிரதமர் மோடி’ !

Spread the love

தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.

தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று பீஜிங், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தொடங்குகிறது.

இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு, தென்ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பு விடுத்து இருந்தார். அதனை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி இன்று காலை தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.

இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக காணொலி காட்சி மூலம் நடந்து வந்த இந்த மாநாடு, இந்த வருடம் நேரடி நிகழ்வாக நடைபெறுகிறது.

மாநாட்டில், பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வங்காளதேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கிறார்கள்.

வரும் 24-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பொது கரன்சி உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், பிரிக்ஸ் அமைப்பில் மேலும் சில நாடுகளை சேர்த்து விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

சுமார் 23 நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்காக விண்ணப்பித்து இருக்கும் நிலையில், அதுகுறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்பில் கூடுதலாக நாடுகளை சேர்ப்பதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து உள்ளது. மேலும், பிரிக்ஸ் விரிவாக்கத்தை திறந்த மனதுடன் ஏற்பதாகவும், நேர்மறையாக அணுகுவதாகவும் வெளியுறவு அமைச்சக செயலாளர் வினய் குவாத்ரா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

தற்போது இந்தியாவைத்த தொடர்ந்து சீனாவும் பிரிக்ஸ் விரிவாக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.

பிரிக்ஸ் ஒரு வெளிப்படையான மற்றும் உள்ளடக்கிய அமைப்பாக இருப்பதை சீனா விரும்புவதாகவும், பிரிக்ஸ் பெரிய குடும்பத்தில் இணையும் ஒத்த கருத்துள்ள நாடுகளை வரவேற்பதாகவும் அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த நிலையில், பிரிக்ஸ் மாநாட்டை தொடர்ந்து பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர் அல்லாத நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கும் ‘பிரிக்ஸ் – ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்’ நிகழ்ச்சியிலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.

மேலும், பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் நேருக்கு நேர் சந்திக்கும் பிரதமர் மோடி, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஆனால், சீன அதிபர் ஜின்பிங்குடன் நேரடி சந்திப்பு நடைபெறுமா? என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு 25-ந்தேதி கிரீஸ் நாட்டுக்கு செல்ல உள்ளார். அங்கு கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், கடந்த 40 ஆண்டுகளில் கிரீஸ் நாட்டுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் ‘பிரதமர் மோடி’ என்பதும் குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours