புகுசிமா அணுவுலையில் இருந்து கதிரியக்கம் கொண்ட கழிவுநீரைக் கடலில் திறந்துவிடும் பணியை 12ஆண்டுகளுக்குப் பின் ஜப்பான் தொடங்கியுள்ளது.
2011ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் நாள் ஜப்பான் கடற்பகுதியில் நிலநடுக்கத்தையடுத்து ஏற்பட்ட சுனாமியால் புகுசிமா அணுவுலையில் கடல்நீர் புகுந்தது. இதனால் அணுக்கசிவு ஏற்பட்டுக் குளிர்விப்பானிலும், உட்புகுந்த கடல்நீரிலும் கதிர்வீச்சு நிறைந்தது.
டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம் இந்தக் கழிவுநீரைக் கடற்பகுதியில் சேமித்து வைத்திருந்தது. இவ்வாறு சேமித்து வைத்திருந்த கதிர்வீச்சுக் கொண்ட கழிவுநீரைப் படிப்படியாகக் கடலில் திறந்துவிட ஜப்பான் அரசு முடிவுசெய்ததற்கு மீனவர்களும், கொரியா உள்ளிட்ட அண்டை நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.
இந்த எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாத ஜப்பானிய அரசு, கதிரியக்கக் கழிவுநீரை முதல் படிப்படியாக பசிபிக் கடலில் திறந்துவிட்டு வருகிறது.
+ There are no comments
Add yours