ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அடுத்த மாதம் புது தில்லியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என அந்நாட்டு அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
ஜி20 தலைவர்களின் உச்சி மாநாடு புதுதில்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் கலந்துகொள்வார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அலுவல் காரணமாக அவர் கலந்துகொள்ள மாட்டார் என ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.
யுக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பிறகு புதின் 2022ல் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
You May Also Like
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் ராகுல் காந்தி
September 8, 2024
ஜம்முவில் சுற்றுலா மையங்கள்- தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக
September 6, 2024
+ There are no comments
Add yours