2001ஆம் ஆண்டு செட்பம்பர் 11ஆம் தேதி ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா பயங்கரவாதிகள், அமெரிக்க பயணிகள் விமானத்தை கைப்பற்றி அதை நியூயார்க்கில் உள்ள வானுயர்ந்த கட்டடங்களில் மோதி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்தனர்.
இந்த தாக்குதல் உலக வரலாற்றில் மிக மோசமான ஒரு தாக்குதல். அமெரிக்கா மட்டுமல்ல பிற நாடுகளும் இந்த தாக்குதலை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.
அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்த நான்கு சிறிய விமானங்களை ஒரே சமயத்தில் தீவிரவாத குழுவினர் ஹைஜாக் செய்தனர். அதன்பிறகு நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் உள்ள கட்டடங்களை தாக்குவதற்கான ஒரு ஏவுகணை போல அந்த விமானங்கள் செயல்பட்டன.
இரு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தை தாக்கின. முதல் விமானம் நார்த் ட்வர்
என்று சொல்லப்படும் கட்டடத்தை உள்ளூர் நேரப்படி 8.46 மணியளவில் தாக்கியது. இரண்டாவது விமானம் சவுத் டவரை 9.03 மணிக்கு தாக்கியது.
கட்டடம் தீப்பற்றி எரிந்தது. கட்டடத்தின் மேல் மாடிகளில் பலர் சிக்கி தவித்தனர். புகை நகரம் முழுவதும் சூழ்ந்தது. இரண்டே மணி நேரத்தில் 110 மாடி கட்டடமும் சரிந்து விழுந்து புகை மண்டலத்தை உருவாக்கியது.
9.37 மணியளவில் மூன்றாவது விமானம் பென்டகனின் மேற்கு பகுதியை தாக்கியது. பென்டகன் என்பது அமெரிக்க ராணுவத்தின் பிரமாண்ட தலைமையகம். இது நாட்டின் தலைநகரமான வாஷிங்டன் டி.சியில் உள்ளது.
நான்காவது விமானம் பென்னில்சில்வேனியாவில் உள்ள வயல்வெளி ஒன்றில் நொறுங்கி விழுந்தது. ஆனால் இந்த விமான நாடாளுமன்ற கட்டடமான கேபிட்டலின் மீது மோத திட்டமிடப்பட்டிருந்ததாகவும் பயணிகள் சண்டையிட்டதால் அது வயல்வெளியில் மோதப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதில் 3000 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இரட்டைக் கோபுரங்களும் இருந்த இடம் தெரியாமல் சாம்பலாயின.
இந்த தாக்குதல் நடைபெற்ற ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் டபள்யு புஷ் அல் கய்தாவை அழிக்கவும் ஒசாமா பில் லேடனை பிடிக்கவும் ஆப்கானிஸ்தானில் போர் தொடுத்தார். இதற்கு சர்வதேச நாடுகளுடன் கூட்டணி அமைக்கப்பட்டது.
இருப்பினும் 2011ஆம் ஆண்டுதான் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் கண்டறிந்து கொன்றது அமெரிக்க படை.
இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டு கொடுத்த காலித் ஷேக் முகமது பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். இன்றளவும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அல் கெய்தா என்ற இயக்கம் இன்றளவும் உள்ளது. ஆப்ரிக்க துணை சஹாரா பகுதியில் வலுவாக உள்ளது. இருப்பினும் ஆப்கானிஸ்தானிலும் அதன் உறுப்பினர்கள் உள்ளனர்.
கிட்டதட்ட 20 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு சில தினங்களுக்கு முன் வெளியேறின. இதனால் அல் கெய்தா இயக்கம் மீண்டும் அங்கு வரும் ஆபத்து உள்ளதாக பலரும் அஞ்சுகின்றனர்.
விமானத்தை ஹைஜாக் செய்தவர்களில் 15 பேர் செளதியை சேர்ந்தவர்கள். இருவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்தவர்கள், ஒருவர் எகிப்தை சேர்ந்தவர் மற்றும் ஒருவர் லெபனானை சேர்ந்தவர்.
+ There are no comments
Add yours