விண்வெளியிலிருந்து பூமிக்கு “CONNECT”..

Spread the love

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீரர் ஒருவர் தனது மகனுடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குவைத் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ‘சுல்தான் அல் நெயாடி’ சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக பணியில் உள்ளார். இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரக ‘எம்பிஆர்’ விண்வெளி மையம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.

அதில் சர்வதே விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுல்தான் அல் நெயாடி பூமியில் உள்ள தனது மகனுடன் வீடியோ காலில் பேசுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

முதலில் அந்த வீடியோவில் ”என் பெயர் அப்துல்லா சுல்தான் அல் நெயாடி” என விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடியின் மகன் பூமியிலிருந்து தனது அப்பாவிடம் கேள்வியைக் கேட்கும்போது தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

பின்னர், வரும் செப்டம்பர் 1-ம் தேதி பூமிக்கு திரும்ப இருக்கும் அல் நெயாடியிடம், “பூமியில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ன” என்று அவரது மகன் கேட்கிறார்.

அதற்கு நீ தான் என பதில் அளிக்கிறார் அல் நெயாடி. மேலும், பூமியில் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே போல தான் நாங்களும் இங்கு அனைத்து வசதிகளுடனும் இருக்கிறோம் என்று கூறினார்.

இப்படி தந்தை-மகன் இருவருக்கும் இடையேயான பாச பரிமாற்றத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி பகிரப்பட்ட இந்த பதிவை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தற்போது வரை பார்த்து லைக் செய்துள்ளனர்.

மேலும், சிலரோ எங்களையும் தொடர்பு கொண்டு பேசுங்கள் என குறும்புதனமாக கருத்து பதிவிட்டுள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours