தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் இந்திய அணி…

Spread the love

அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் களம் இறங்குகிறது. டப்ளின், 20 ஓவர் கிரிக்கெட் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட முதல் ஆட்டத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி 2 ரன் வித்தியாசத்தில வெற்றி பெற்ற இந்தியா, 2-வது ஆட்டத்தில் 33 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை தோற்கடித்து தொடரையும் கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா- அயர்லாந்து மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது. தொடரை இந்தியா வசப்படுத்தி விட்டதால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனவே இந்திய அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும். இதுவரை வாய்ப்பு அளிக்கப்படாத விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா, சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் அகமது, வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் ஆகியோருக்கு இடம் அளிப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.

அதே சமயம் காயத்தில் இருந்து மீண்டு இந்த தொடரின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா முதல் இரு ஆட்டங்களில் தலா இரு விக்கெட் வீதம் வீழ்த்தி கவனத்தை ஈர்த்தனர். என்றாலும் தங்களது உடல்தகுதியை இன்னும் சோதித்து பார்க்க இன்றைய ஆட்டத்திலும் களம் காண்பார்கள். கடந்த ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டின் அரைசதமும் (58 ரன்), புதுமுக வீரர் ரிங்கு சிங்கின் அதிரடி ஜாலமும் (2 பவுண்டரி, 3 சிக்சருடன் 38 ரன்) வெற்றியை எளிதாக்கியது.

அதே ரன் வேட்டையை கடைசி ஆட்டத்திலும் வெளிப்படுத்த ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். எதிர்பார்க்கப்பட்ட இடக்கை பேட்ஸ்மேன் திலக் வர்மா (0 மற்றும் 1 ரன்) அவசரகதியில் ஷாட்டுகளை அடித்து ஏமாற்றம் அளித்தார். இன்றைய ஆட்டத்தில் அவர் கவனமுடன் மட்டையை சுழற்றுவார் என்று நம்பலாம். மொத்தத்தில் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours