வியட்நாம் தலைநகர் ஹனோயில் 9 அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள ஒன்பது மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், உள்ளூர் நேரப்படி நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. குடியிருப்பாளர்கள் பலர் வீட்டில் இருந்தபோது இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட பலர் காயம் அடைந்து மருத்துமனையில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறுகிய பாதையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள நிலையில், நீண்ட நேரத்துக்கு பிறகு இன்று காலை தான் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பார்க்கிங் தளத்தில் தீப்பிடித்த நிலையில், குடியிருப்பில் தீ பரவியதாக கூறப்படுகிறது. மேலும் தீ விபத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
+ There are no comments
Add yours