தென்னாபிரிக்காவின் தொழில் நகரமாக விளங்கும் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் இன்று காலை ஓர் ஐந்தடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்தது. ஒரு தளத்தில் ஏற்பட்ட தீயானது மளமளவென கட்டிடம் முழுக்க பரவியது.
ஏற்கனவே ஜோகன்னஸ்பர்க் நகரம் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகரம். தீ பற்றிய போது அந்த கட்டிடத்தில் அதிக மக்கள் இருந்த்துள்ளனர். இதில் தீ விபத்தில் சிக்கி இதுவரை 63 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், 45க்கும் மேற்பட்டர் தீ காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் மூச்சுத்திணறல் காரணமாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் தான், ஜோகன்னஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது. பிரதமர் மோடி உள்பட பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரதான நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours