தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 5-வது இடம் !

Spread the love

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 5-வது இடத்தைப் பிடித்தது. புடாபெஸ்ட், கடந்த 19-ந் தேதி தொடங்கிய உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு ஆண்கள் அணிகளுக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் தகுதி சுற்று நடந்தது. இதில் முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய குழுவினர் 2 நிமிடம் 59.05 வினாடிகளில் இலக்கை கடந்து 2-வது இடத்தை பிடித்து 8 அணிகளில் ஒன்றாக இறுதி சுற்றுக்குள் நுழைந்தனர்.

இந்த நிலையில் ஆண்கள் அணிகளுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்தது. இலக்கை 2 நிமிடம் 59.92 வினாடிகளில் கடந்த இந்திய வீரர்கள் 5-வது இடத்தைப் பிடித்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours