உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்கப்படவில்லை.!

Spread the love

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து சுமார் ஒன்றரை வருடங்களை கடந்து விட்டது. இன்னும் அங்கு பல்வேறு இடங்களில் இயல்பு நிலை திரும்பாமல் இருந்து வருகிறது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு நாடுகள் ரஷ்யாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை பெரும்பாலும் நிறுத்திக்கொண்டன. இப்படி இருக்கும் சூழலில், உக்ரைன் மற்றும் ரஷ்யா என இரு நாடுகளுடனும் நல்லுறவை வைத்து இருக்கும் இந்தியா, தற்போது ஜி20 நாடுகளுக்கு தலைமை வகித்து வருகிறது.

நேற்றும் இன்றும் ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. அங்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் என உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் ஜி20யில் உறுப்பினராக இருக்கும் ரஷ்ய அதிபர் புதின் கலந்துகொள்ளவில்லை.

அவருக்கு பதிலாக ரஷ்யா நாட்டின் பிரதிநிதியாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்துகொண்டார். இன்று இரண்டாம் நாள் ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த உடன் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இது ஒரு திருப்புமுனை மிகுந்த உச்சிமாநாடு, இது பல முக்கிய துறைகளில் முன்னேற ஒரு வழியை வழங்குகிறது என தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், ஜி20 மாநாட்டை அரசியலாக்கும் முயற்சிகள் தடுக்கப்பட்டது என தெரிவித்தார். உக்ரைனில் நடந்த போர் பற்றி ஜி20 நிகழ்ச்சி நிரலில் எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்படவில்லை என்றும் உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலை உக்ரைன்மயமாக்கும் மேற்கத்திய நாடுகளின் (அமெரிக்கா , இங்கிலாந்து) முயற்சிகளை எங்களால் தடுக்க முடிந்தது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் G20 உச்சி மாநாடு உலகளாவிய நிர்வாகம் மற்றும் உலகளாவிய நிதி ஆகியவற்றில் நேர்மையை வழிகாட்டுகிறது. உலகில் இந்த புதிய அதிகார மையங்களை காணும் போது மேற்கு “மேலதிகாரமாக இருக்க முடியாது” என்று அமெரிக்காவை மறைமுகமாக சாடி தனது உரையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பேசினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours