இந்தியா, ரஷியாவிற்கு அடுத்தப்படியாக ஜப்பானும் நிலவை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்ப உள்ளது.
இந்தியா மற்றும் ரஷியா நாடுகள் சமீபத்தில் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது. இந்தியாவின் சந்திரயான் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்டு இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது.
இதனிடையே, கடந்த ஜூன் 10ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ரஷ்யா லூனா 25 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை ஐந்தே நாளில் சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
மேலும், 1,800 கிலோ எடை கொண்ட ரஷ்யாவின் லூனா 25 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிமங்கள், ஆக்சிஜன், குடிநீர், எரிபொருள் போன்றவற்றை ஆய்வு செய்ய இருப்பதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்தது.
ஆனால், திட்டமிட்டபடி நிலவில் இந்த விண்கலத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது, லூனா – 25 விண்கலத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டு லூனா -25 விண்கலம் நிலவில் மோதி தோல்வியடைந்தது.
இந்த நிலையில், இந்தியா, ரஷியாவிற்கு அடுத்தப்படியாக வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி நிலவை ஆய்வு செய்ய இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு ஜப்பான் எஸ்.எல்.ஐ. எம் விண்கலத்தை நிலவில் செலுத்த உள்ளது .
இந்தியா, ரஷியாவுக்கு அடுத்து மூன்றாவது நாடாக ஜப்பான் நிலவை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours