பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்த ஐக்கிய அரபு அமீரகம் !

Spread the love

பாகிஸ்தானில் தேவாலயங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த வாரத்தில் தேவாலயங்கள் மற்றும் பல்வேறு வீடுகளுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்தனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம், அமைதியை ஏற்படுத்த சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு மாறாக நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளையும் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.

சகிப்புத் தன்மை மற்றும் அமைதியை நிலைநாட்ட, சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்து செயல்படவேண்டிய இந்த தருணத்தில், பிரிவுபடுத்தும் செயல்பாடுகளை தவிர்த்து மத அடையாளங்களுக்கு மதிப்பு அளிக்கவேண்டியது அவசியம் என்று ஐக்கிய அரபு அமீரகம் வலியுறுத்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours