உக்ரைன் விமானப்படை வீரர்களுக்கு அடுத்த மாதம் முதல் எஃப் 16 ரக போர் விமானங்களை இயக்க பயிற்சி அளிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உக்ரைன்-ரஷ்யா போரைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டு விமானப் படையினருக்கு பயிற்சி அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் Pat Ryder கூறுகையில், உக்ரைன் விமானப்படை வீரர்களுக்கு அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் அரிஸோனா மாகாணங்களில் இந்த பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த பயிற்சியின் எஃப் 16 ரக போர் விமானங்களை இயக்குவது மற்றும் விமானத்தை பராமரிப்பது உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதற்காக வரும் செப்டம்பர் மாதம் உக்ரைன் வீரர்கள் அமெரிக்கா வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு முதலில் ஆங்கில மொழி பயிற்சி வழங்கப்படும் என்றம், அதனைத் தொடர்ந்து நவீன ரகப் போர் விமானங்களின் இயக்கம் உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்றும் பேட் ரைடர் தெரிவித்தார்.
முன்னதாக, இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் உக்ரைன் அதிபர் ஸெலன்கி இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
+ There are no comments
Add yours