தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த விவேக் ராமசாமி !

Spread the love

பருவநிலை மாற்றம் தொடர்பாக விவேக் ராமசாமி தெரிவித்த கருத்துக்கு அமெரிக்க அதிபர் பதிலளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஆளும் ஜனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் தற்போதே ஆரம்பித்துவிட்டன. குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். அதே சமயம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 38 வயதான தொழிலதிபர் விவேக் ராமசாமி, குடியரசு கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார்.

குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விவேக் ராமசாமிக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் சமீபத்திய விவேக் ராமசாமியின் பேச்சுக்கள் அனைத்தும் கவனம் ஈர்த்து வருகின்றன. இந்த நிலையில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான எட்டு போட்டியாளர்கள் நேற்று ஒரே மேடையில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தனர். டொனால்ட் ட்ரம்ப் இந்த நிகழ்ச்சிக்கு செல்வதை தவிர்த்துவிட்டார்.

கூட்டத்தில் பேசிய விவேக் ராமசாமி, அனுபவமில்லாத அரசியல்வாதி என தன் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். தனது போட்டியாளர்களை தொழில் முறை அரசியல்வாதி என்று விமர்சித்தார். மேலும் பேசிய அவர், “பருவநிலை மாற்றம் என்பதே ஒரு புரளிதான். காலநிலை மாற்றம் என்பதைக் காட்டிலும் காலநிலை மாற்றம் தொடர்பான மோசமான கொள்கைகள் காரணமாக பலர் இறந்துள்ளார்கள் என்பதுதான் உண்மை. இந்த மேடையில் அமர்ந்துள்ள காசு கொடுத்து வாங்கப்படாத ஒரே வேட்பாளர் நான் மட்டும்தான். இதை சொல்லும் தைரியம் எனக்கு மட்டும்தான் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததோடு, அமெரிக்க அதிபர் ஜே பைடன் உள்பட பல தலைவர்கள் விவேக் ராமசாமியை விமர்சித்துள்ளனர். இதுதொடர்பாக ஜே பைடன் தனது எக்ஸ் பக்கத்தில், “காலநிலை மாற்றம் என்பது உண்மையானது” என பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், பருவநிலை மாற்ற விவகாரத்தில் பேசிய தென் கரோலினாவின் முன்னாள் கவர்னர் நிக்கி ஹேலி, இந்தியாவும் சீனாவும் மாசு உமிழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். நம் அனைவருக்கும் சுத்தமான காற்று, சுத்தமான கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நிக்கி ஹேலி, அதனை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். அதற்கு ஒரு வழி இருக்கிறது. பருவ நிலை மாற்றம் என்பது உண்மையா என்றால் ஆம் உண்மைதான். நீங்கள் சுற்றுச் சூழலை மாற்ற வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினால் சீனா மற்றும் இந்தியாவிடம் சென்று மாசு உமிழ்வை குறையுங்கள் என்று சொல்ல வேண்டும்” என்று பேசினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours