வாக்னர் குழு தலைவர் விமான விபத்தில் மரணம்… ரஷ்ய ஊடகங்கள் தகவல்!

Spread the love

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன. உக்ரைனக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. இதேபோல் ரஷ்யா தன்னிடம் உள்ள ஆயுதங்களை வைத்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இருநாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த கடுமையான போரால் இரண்டு நாடுகளுமே பெரும் உயிர் சேதத்தையும் பொருள் சேதத்தையும் சந்தித்து வருகின்றன. இந்த போரில் ரஷிய பாதுகாப்பு படையினருடன் இணைந்து அந்நாட்டில் இயங்கி வந்த ‘வாக்னர்’ எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்தது.

ஆனால் கடந்த ஜூன் மாதம் வாக்னர் குழுவுக்கும் ரஷ்ய ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்னர் குழுவின் தலைவராக யெவ்ஜெனி பிரிகோஸின் ரஷ்ய ராணுவத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். இதனால் வாக்னர் குழு ரஷியாவுக்கு எதிராக திரும்பியது. ரஷ்யாவின் சில பகுதிகளை வாக்னர் குழு கைப்பற்றியதாகவும் தகவல் வெளியானது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக தனது படைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்த பிரிகோஸின், பெலாரஸ் நாட்டிற்கு சென்றார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த ரஷ்யா, வாக்னர் மீதான அனைத்து கிரிமினல் வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

இந்நிலையில் வாக்னர் குழு தலைவரான யெவ்ஜெனி பிரிகோஸின் விமான விபத்தில் மரணமடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு ஜெட் விமானத்தின் பயணிகள் பட்டியலில் யெவ்ஜெனி பிரிகோஸின் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும், அந்த ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.

மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி பறந்து கொண்டிருந்த ஜெட் விமானத்தில் ஏழு பயணிகள் மற்றும் மூன்று பணியாளர்கள் இருந்தனர். தனியார் எம்ப்ரேயர் லெகசி என்ற விமானம் தரையில் மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்துள்ள நிலையில் யெவ்ஜெனி பிரிகோஸினும் உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours