ஜிம்பாப்வே-ன் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. ஜிம்பாப்வேயில் 210 ஒற்றை உறுப்பினர் தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இதற்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆளுங்கட்சியான ஷானு-பிஎஃப் கட்சி 43 தொகுதிகளிலும் எதிர்க்கட்சியான மாற்றத்திற்கான குடிமக்கள் கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
புதன்கிழமை நடைபெற்ற அதிபருக்கான வாக்கெடுப்பில் தற்போதைய அதிபரான எம்மர்சன் நங்காக்வா அதிகாரத்தை தக்க வைத்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதிபருக்கான முடிவுகள் இன்னும் சில நாட்களுக்கு வெளியாக வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்குப்பதிவுகள் ஜனநாயக முறையில் நடத்தப்படவில்லை என விமர்சகர்கள் சுட்டி காட்டியுள்ளனர்.
+ There are no comments
Add yours