ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த உங்கள் கருத்து…!

Spread the love

நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனைகளை ஜனவரி 15 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுமக்கள் மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று ஒரே நாடு.

ஒரே தேர்தல் குழு செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஒரே தேர்தல் என்பது லோக்சபாவிற்கும் மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களுக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதான். அவ்வாறு நடத்தும்போது பொதுமக்கள் ஒரே நேரத்தில் 2 வாக்குகளை செலுத்த வேண்டும். சட்டசபைக்கும் லோக்சபாவிற்கும் ஒரே தேர்தல் நடத்துவதால் அரசுக்கு தேர்தலுக்கான செலவு குறையும் என்று கூறப்படுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நமது நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 1967-ம் ஆண்டு லோக்சபாவிற்கும் சட்டசபைக்கும் ஒன்றாகவே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு, 1968 மற்றும் 1969ஆம் ஆண்டுகளில் சில மாநில சட்டசபைகள் பல்வேறு காரணங்களால் கலைக்கப்பட்ட பின்னர் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்கள் தனித்தனியே நடைபெற்றது.

ஒரே நாடு ஒரே தேர்தல்:

2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்து மோடி பிரதமரானது முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை மோடி வலியுறுத்தி வருகிறார். இது சாத்தியம் அல்ல எதிர்கட்சியினர் கூறி வருகின்றனர். 2024ஆம் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலின் போது சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலை இணைந்து நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை தற்போது சாத்தியமாகா விட்டாலும் அடுத்த 10 அல்லது 15 வருடங்களில் முழுமையாக அமலாக்கம் பெறும் என கணிக்கப்படுகிறது. இந்த தேர்தல் முறையால் இந்தியாவுக்கு கிடைக்கும் பல்வேறு பலன்களும் மத்திய அரசு சார்பில் முன்வைக்கப்பட உள்ளன. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் மட்டும் சுமார் ரூ.60,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இதில், மத்திய அரசின் செலவுடன் அரசியல் கட்சிகளின் செலவும் அடங்கும். இதில் சட்டப்பேரவை தேர்தல்களையும் சேர்த்தால் தேர்தல் செலவு மேலும் பல ஆயிரம் கோடியை தாண்டும். இந்த செலவுத் தொகையில் பெரும்பகுதி இந்தியாவுக்கு மிச்சமாகும் என்று கூறப்படுகிறது.

ஆராய குழு:

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகளைத் தெரிவிக்க:

இந்த நிலையில் நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனைகளை ஜனவரி 15க்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரே நாடு. ஒரே தேர்தல் குழு செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஒரே தேர்தல் குறித்த சட்டங்களில் திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனை அனுப்பலாம். பரிந்துரைகளை https://onoe.gov.in அல்லது sc-hic@ gov.in என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours