பயங்கரவாரத்தை காங்கிரஸ் கட்சி ஊக்குவிப்பதாக சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா (amit shah) தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி 20 தொகுதிகளில் முதல்கட்டத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 17-ம் தேதி 70 தொகுதிகளில் இரண்டாம் கட்டத் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.இம்மாநிலத்தில் ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் பாஜக வசம் செல்லாத வண்ணம் இருக்க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில்,மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜக்தல்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் “நக்சல் தீவிரவாதத்தால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட மாநிலம் சத்தீஸ்கர். இதன் காரணமாகவே, இம்மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதை அடுத்து, நக்சல் தீவிரவாதத்தை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டார்.
மேலும் பஸ்தர் மாவட்டமும், அம்மாவட்டத்தில் உள்ள ஜக்தல்பூரும் ஒரு காலத்தில் நக்சல் தீவிரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்கடந்த 9 ஆண்டு பாஜக ஆட்சியில் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அச்சுறுத்தலில் இருந்து 52 சதவீதம் வன்முறைசம்பவங்கள் குறைந்துள்ளன என்று தெரிவித்தார்.
நக்சலிசத்தை காங்கிரஸ் கட்சி ஊக்குவிக்கிறது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு அனுப்பும் பணம், காங்கிரஸின் ஏடிஎம் மூலம் டெல்லிக்கு திருப்பி விடப்படும் என்று தெரிவித்த அவர்,சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி அமைந்தால் நக்சலிசத்தை ஒழிக்கும் என்று தெரிவித்தார்.
+ There are no comments
Add yours