தீவிர பிரசாரத்தில் ஜேபி நட்டா! 

Spread the love

அரியலூர்இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் ஜெயிலில் உள்ளனர் அல்லது பெயிலில் உள்ளனர் எனவிமர்சித்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாகொள்ளை அடிப்பதுதான் திமுகவின் கொள்கை என குற்றம்சாட்டினார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்தியாயினிக்கு வாக்கு சேகரித்துஅரியலூர் அடுத்த கோவிந்தபுரம் கிராமத்தில் இன்று (ஏப்.7) நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர்ஜே.பி.நட்டா பங்கேற்று பேசியது: “எழுச்சியுடன் வந்துள்ள இந்த கூட்டத்தை பார்க்கையில் சிதம்பரம் மக்களவைத்தொகுதியில் கார்த்தியாயினி வெற்றிப் பெறுவது உறுதிநாயன்மார்கள்சித்தர்கள் வாழ்ந்த இந்த பகுதிக்குவந்துள்ளதை நான் பெருமையாகக் கருதுகிறேன்இப்பகுதி மக்கள் கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர்இதனை திமுகவும்காங்கிரஸ் கட்சியும் அழிக்கத் துடிக்கின்றன.

மோடி ஆட்சிக்கு வந்த பின் கரோனாவை கையாண்டதில் பொருளாதாரத்தில் 13- வது இடத்திலிருந்து 5 வதுஇடத்துக்கு வந்துள்ளோம்கார்த்தியாயினியை வெற்றிப்பெற வைத்தால் மோடி அவர்களை 3 முறையாக பிரதமராகஅமர்த்தலாம்சீனாவிடம் இருந்து செல்போன்கள் வாங்கிய காலம் மாறிதற்போது இந்தியாவிலேயேஅதிகப்படியான செல்போன்கள் தயாரிக்கப்படுவதை நாம் அறிவோம்அதேபோல் வாகன உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளதுஇதற்கு முன்பு மருந்துகள் வெளிநாட்டிலிருந்து வாங்கப்பட்ட நிலையில்தற்போதுஇந்தியாவிலேயே அனைத்து மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.

அந்த அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளதுஇதற்கு முழு காரணமாக மோடி இருந்துள்ளார்மீண்டும் மோடி பிரதமராகதேர்ந்தெடுக்கப்படும் நிலையில் இந்தியா மேலும் பல்வேறு வளர்ச்சிகளை அடையும்பெண்களுக்கு அதிகாரம்தருவதுபடித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புவிவசாயிகள் வளர்ச்சிபட்டியலின மக்கள்பழங்குடியினமக்கள் வளர்ச்சி என அனைவருக்குமாக மோடி ஆட்சி செய்து வருகிறார்.

இந்தியாவில் பிரதமரின் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறதுஇத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 55 கோடி மக்கள் பயன் பெறுகின்றனர்மாதம் 80 கோடி மக்களுக்கு இலவசஅரிசிகோதுமை ஆகியவற்றை மத்திய அரசு வழங்கி வருகிறதுமோடி ஆட்சிக்கு வந்த பிறகு 25 கோடிக்கும்அதிகமான மக்கள் வருமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்தமிழகத்தில் 30 லட்சம் விவசாயிகளுக்குஉதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 40 லட்சம் பேருக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது, 14 லட்சம் வீடுகள் கட்டப்படுள்ளன. 80 லட்சம் வீடுகளுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் மீது பிரதமர் மோடிக்கு அதிகப்படியான பாசம் உள்ளதுதமிழகத்துக்கு வழங்கப்படும் நிதிஅதிகப்படுத்தப்பட்டுள்ளதுகிராமபுற சாலை வசதி மேம்படுத்துதல்கிராமபுற வளர்ச்சி என அனைத்துக்கும்அதிகப்படியான நிதிகள் வழங்கப்பட்டுள்ளனநெடுஞ்சாலை திட்டத்துக்கும் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளதுகோவைஒசூர்சேலம்திருச்சிசென்னை ஆகிய இடங்களில் ரூ.12 ஆயிரம் கோடியில் பாதுகாப்பு தளவாடபொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றனசென்னைபெங்களூர் தொழிற்சாலை காரிடர் நகரங்களாகஉருவாக்கப்பட்டு வருகிறதுஇந்தியாவில் ஊழில் இல்லாத ஆட்சியை மோடி வழங்கி வருகிறார்.

ஆனால் இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் குடும்பக் கட்சிகள்அவர்கள் அனைவரும்ஊழல்வாதிகள்வாரிசு அரசியல்தமிழகம் முழுவதும் கொள்ளை அடிப்பதுகட்டப் பஞ்சாயத்து செய்வது என்பதுதான் திமுகவின் கொள்கைகுடும்ப ஆட்சி நடத்துவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததுதான் இண்டியா கூட்டணிஅந்த கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஒன்று ஜெயிலில் உள்ளனர் அல்லது பெயிலில் உள்ளனர்” என்று பேசினார்.

கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஹெச்.ராஜாமாவட்டத் தலைவர் அய்யப்பன்பாமக மாவட்டச் செயலாளர்ரவிசங்கர்பாமக வன்னியர் சங்கத் தலைவர் வைத்திதமாகா மாவட்டத் தலைவர் நடராஜன்மாநில செயற்குழுஉறுப்பினர் மாசிலாமணிஅமமுக பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன்ஐஜேகே அரியலூர்மாவட்டத்தலைவர் ஜோசப் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours