இந்த ஆண்டு ஜி-20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தி வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா என 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பலப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு கட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரயில்வே துறை சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது டெல்லி உச்சி மாநாடு நடைபெறுவதை ஒட்டி டெல்லிக்கு செல்லும் டெல்லி வழியே செல்லும் 207 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும், செப்டம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய மூன்று நாட்களுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் 36 ரயில்கள் குறிப்பிட்ட தூரம் வரையில் இயக்கப்படும் எனவும் ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours