இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றின் , 4வது போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்கி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். இப்போட்டியில் ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். சுப்மன் கில் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கடந்த போட்டியில் சதம் அடித்து 13000 ரன்களை கடந்த விராட் கோலியின் மீது எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அவர் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.அடுத்ததாக கேப்டன் ரோஹித் சர்மா 53 ரன்களுக்கு ஆட்டமிழக்க கே.எல். ராகுல் 39 ரன்கள் , இஷான் கிஷன் 33 ரன்கள், ஹர்திக் பாண்டியா 5 ரன்கள் , ரவீந்திர ஜடேஜா 4 ரன்கள் , அக்சர் படேல் 15 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தனர்.இறுதியில் இந்திய அணி 49.1 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்களை எடுத்தது.
இலங்கை பந்துவீச்சாளர்களில் துனித் வெல்லலகே 5 விக்கெட்களையும் அசலங்கா 4 விக்கெட்களையும் வீழ்த்தி இந்திய அணியின் ஸ்கோரை வெகுவாக குறைத்து நெருக்கடியை கொடுத்தனர். எம் தீக்ஷனா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
214 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாத்தும் நிஸ்ஸங்க 6 ரன்களுக்கு பும்ராவிடம் ஆட்டமிழக்க மற்றொரு ஆட்டக்காரர் திமுத் கருணாரத்ன சிராஜிடம் ஆட்டமிழக்க இலங்கைக்கு ஆரம்பமே அடி சறுக்கியது.அதன் பின் வந்த அடுத்தடுத்து ஆட்டமிழக்க தனஞ்சய டி சில்வா(41) மற்றும் துனித் வெல்லலகே (42) அணியை தோல்வியிலிருந்து மீட்க போராடினர்.இறுதியில் இலங்கை அணி 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியை தழுவியது. இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும் , ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்களையும்.முகமது சிராஜ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.இப்போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணியின் பந்துவீச்சாளர் துனித் வெல்லலகே தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றி மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 24 மணிநேரத்தில் 2 வெற்றியை பெற்று இந்திய அணி சாதனை படைத்தது. நேற்று முன்தினம் ரிசர்வ் டே அன்று பாகிஸ்தான் அணியுடன் மோதி இந்தியா அபார வெற்றி பெற்று இருந்தது. அதே போல நேற்ற இலங்கை அணியுடன் மோதி இரவு வெற்றியை பதிவு செய்தது.
மேலும், ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் தொடர்ந்து விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றியை தழுவி இறுதி போட்டிக்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது இந்திய அணி. மற்ற அணிகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் ஒரு தோல்வி கண்டுள்ள நிலையில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் தோல்வி பெறாத காரணத்தால் இறுதி போட்டிக்குகள் செல்வதில் எந்தவித தடையும் இல்லை என கூறப்படுகிறது.
இந்தியா அடுத்ததாக வரும் 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வங்கதேச அணியுடன் சூப்பர் 4 சுற்றில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பலம் வாய்ந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான், இலங்கை அணியை வென்ற இந்திய அணி வங்கதேசத்தையும் எளிதில் வீழ்த்தும் என கிரிக்கெட் விமர்சகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
+ There are no comments
Add yours