30 வருட வாழ்க்கை போதும் … குறிப்பு எழுதி விட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை !

Spread the love

மத்திய பிரதேசத்தில் 30 வருட வாழ்க்கை போதும் என முன்பே செய்த முடிவை குறிப்பில் எழுதி விட்டு ஓட்டல் அதிபரொருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்தூர், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் ஹிரா நகர் பகுதியில் ஓட்டல் அதிபர் ஒருவர் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், விசாரணை நடத்தியதில் தற்கொலை குறிப்பு ஒன்று கிடைத்தது. 7 பக்கம் கொண்ட அதில், 30 வயது வரையே வாழ வேண்டும் என 8, 9 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்துள்ள தகவலை அவர் குறிப்பிட்டு உள்ளார்.

வாழ்க்கையில் தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார். 30 வயது, திருமணம் ஆகாத வாலிபரான அவர், மனநல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்திருக்க கூடும் என போலீசார் கூறுகின்றனர்.

அவருடைய உடல் அருகே கைத்துப்பாக்கி ஒன்று கிடைத்தது. 2016-ம் ஆண்டு சுய பாதுகாப்பிற்காக அதனை வாங்கி உள்ளார். இந்த தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் கிடையாது என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இந்த குறிப்பு அடிப்படையில், அவர் மனநல பாதிப்புக்கு ஆளாகி இருக்க கூடும் என தெரிகிறது. எனினும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது என்று உதவி போலீஸ் கமிஷனர் தயஷீல் எவாலே கூறியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours