இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் தமிழ்நாடு வீரர் குகேஷ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கடந்த 37 ஆண்டுகளாக விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் நம்பர் 1 வீரராக இருந்து வந்த நிலையில், அவரது சாதனை பயணம் நிறைவு பெற்றுள்ளது. இதுவரை ஹரிகிருஷ்ணா, குகேஷ் ஆகியோர் லைவ் ரேட்டிங் பட்டியலில் மட்டுமே விஸ்வநாதன் ஆனந்தை கடந்து இருந்தனர்.
இந்நிலையில் 37 ஆண்டுகளில் முதல் முறையாக விஸ்வநாதன் ஆனந்தை அதிகாரப்பூர்வ பட்டியலில் கடந்து குகேஷ் சாதனை படைத்துள்ளார். தேசிய அளவில் முதலிடத்தில் உள்ள குகேஷ் 2,758 புள்ளிகளுடன் சர்வதேச அளவில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
2754 புள்ளிகளுடன் விஸ்வநாதன் ஆனந்த் சர்வதேச அளவில் 9வது இடத்திலும், இந்திய அளவில் 2வது இடத்திலும் உள்ளார். சர்வதேச பட்டியலில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா 19-வது இடத்தில் உள்ளார்.
இந்திய செஸ் தரவரிசையில் 37 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தின் சாதனை பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ள குகேஷிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours