ஒரே நாளில் 5 லட்சம் பயணிகள்- இந்திய விமான போக்குவரத்து சாதனை

Spread the love

புதுடெல்லி: நேற்று (நவம்பர் 17, 2024) இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் முதன்முறையாக, ஒரே நாளில் 5 லட்சத்திற்கும் அதிகமான உள்நாட்டுப் பயணிகளை ஏற்றிச் சென்று புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்தியாவில் அனைத்து விமான நிறுவனங்களும் சேர்ந்து 3173 உள்நாட்டுப் புறப்பாடுகளில் 5,05,412 உள்நாட்டுப் பயணிகளை ஏற்றிச் சென்றன. இந்தியாவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு பயணிகள் பயணிப்பது இதுவே முதன்முறை ஆகும்.

நவம்பர் 08 அன்று 4.9 லட்சம் பயணிகளும், நவம்பர் 09 அன்று 4.96 லட்சம் பயணிகளும், இதைத் தொடர்ந்து நவம்பர் 14 அன்று 4.97 லட்சம் பயணிகளும், நவம்பர் 15 அன்று 4.99 லட்சம் பயணிகளும், நவம்பர் 16ஆம் தேதி 4.98 லட்சம் பயணிகளும் உள்நாட்டில் பயணம் செய்தனர்.

திருமண சீசன் துவங்கியதால் தீபாவளிக்கு பிறகு போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் விமானப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இந்த மாதம் சராசரியாக ஒரு நாளைக்கு 3161 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது முந்தைய மாதத்தை விட ஒரு நாளைக்கு சுமார் 8 விமானங்கள் அதிகம் ஆகும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours