ஜம்மு- காஷ்மீரில் 8 பயங்கரவாதிகள் கைது !

Spread the love

காஷ்மீரில் 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டன இதில் ஒருவர் அரசு பணியில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 30 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில், மாநில புலனாய்வு முகமை மற்றும் சி.ஐ.டி. அமைப்பினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தோடா மாவட்டத்தில் வைத்து 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாதிகள் சிலர் அரசு பணிகள் மற்றும் ஒப்பந்ததாரராக உள்ளனர்.

நீதிமன்றத்தில் கூட சிலர் பணியாற்றி வருகின்றனர் என அதிர்ச்சியான தகவலும் கூறப்படுகிறது. சிலர் தனியாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தண்டனையில் இருந்து தப்பி, இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். என போலீசார் கூறினர்.

8 பயங்கரவாதிகளும் அடில் பரூக் பரிடி, முகமது இக்பால் என்ற ஜாவித், முஜாகித் உசைன் என்ற நிசார் அகமது, தாரிக் உசைன், இஷ்தியாக் அகமது, அஜாஸ் அகமது, ஜமீல் அகமது மற்றும் இஷ்பாக் அகமது என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்களில் பரிடி ஜம்முவில் உள்ள மாநில கல்வி வாரியத்தில் பணியாற்றியவர். தோடா நீதிமன்ற வளாகத்தில் இஷ்பாக் எழுத்தராக இருந்துள்ளார். அவர்கள் அனைவரும் பயங்கரவாத ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours