7வது ஊதியக் குழு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி… விதிமுறைகளில் மாற்றம்!

Spread the love

மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது அகலவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக பலர் காத்திருந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பணியாற்றும் பாதுகாப்பு சிவில் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் உள்ள விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு, புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த புதிய மாற்றம் ஏழாவது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெரும் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பதவி உயர்வு வழங்குவதற்கான தகுதி சர்வீஸ் அடிப்படையில் ஒவ்வொரு நிலைக்கு ஏற்ப 1 முதல் 12 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இம்மாதம் 27ம் தேதி அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வரும் என்றும், அக்டோபர் 1ம் தேதி முதல் அது அமலாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், நாட்டில் உள்ள 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours