ஜி20 உச்சி மாநாடு- டெல்லி வான் பகுதியை பாதுகாக்க விமானப்படை தீவிரம் !

Spread the love

ஜி20 அமைப்புக்கு இந்தாண்டு இந்தியா தலைமை ஏற்பதால், இதன் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படும் நாட்டின் தலைவர்கள் வருகின்றனர். இதனால் டெல்லி வான் பகுதியை கண்காணிக்க விமானப்படை தீவிர ஏற்பாடுகளை மேற்கொள்கிறது.

வான் பாதுகாப்பு பணியில் போர் விமானங்கள், தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள், ட்ரோன்களை அழிக்கும் ஆயுதங்கள், வான் கண்காணிப்பு ரேடார்கள், சென்சார்கள் ஆகியவற்றை விமானப் படை ஈடுபடுத்தவுள்ளது.

ரோந்து பணியில் ரபேல், சுகோய், மிராஜ் 2000 போர் விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. மேலும், அம்பாலா, பரேலி, சிர்சா, பதிண்டா, குவாலியர் ஆகிய விமானப் படை தளங்களில் உள்ளபோர் விமானங்கள் தயார் நிலையில்இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லி வான் பாதுகாப்பு வளையத்துக்குள் அத்துமீறி நுழையும் ட்ரோன்கள், விமானங்களை கண்டுபிடிக்க ஆப்ரேஷன்ஸ் உத்தரவு மையம் (ஓடிசி) ஒன்றை விமானப்படை அமைக்கிறது.

தரையிலிருந்து வான் இலக்குகளை சுமார் 70 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகள், 25 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் ஆகாஷ் ஏவுகணைகள் டெல்லி வான் பகுதியை பாதுகாக்க தயார் நிலையில் வைக்கப்படுகின்றன. வான் பகுதியை கண்காணிக்கும் நேத்ரா விமானம், ரேடார்கள் மற்றும் சென்சார்கள் ஆகியவையும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் அச்சுறுத்தலுக்கு தகுந்தபடி உடனடி நடவடிக்கை எடுக்கும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours