அனைத்து துறைகளும் மேலும் வலுவடைந்து வருகின்றன !

Spread the love

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதன் மூலம் அனைத்து துறைகளும் மேலும் வலுவடைந்து வருகின்றன என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் மத்திய அரசின் வேலைவாய்ப்பு விழா (ரோஜ்கார் மேளா) திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.

அதன் எட்டாவது கட்டமாக 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை நாடு முழுவதும் 45 இடங்களில் இன்று வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் இலுப்பைகுடியில் உள்ள இந்திய – திபெத் எல்லைக் காவல்படையின் பயிற்சி மையத்தில் நடந்த வேலை வாய்ப்பு விழாவில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு படைகளான இந்திய – திபெத் எல்லைக் காவல்படை, மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாப்பு படை , ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட படைகளை சார்ந்த 206 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours