லடாக் விபத்தில் உயிாிழந்த இந்திய ராணுவ வீரா்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தொிவித்துள்ளனா்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக்க்கின் கரு ஹரிசன் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ராணுவ வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த வீரர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
இந்நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவா் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விபத்தில் இந்திய ராணுவ வீரர்களை இழந்து தவிப்பதாகவும், தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய செழுமையான சேவை எப்போதும் நினைவு கூரப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.
இதேபோல் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு , காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலா் இரங்கல் தொிவித்துள்ளனா்.
+ There are no comments
Add yours