ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியை தற்போது பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது .
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்த அணியில் திலக் வர்மா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .
சமீப காலமாக இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று பல சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில் தற்போது ஆசியக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் மீது ரசிகர்கள் ஏகபோக நம்பிகை வைத்துள்ளனர் .
அதே சமயம் காயத்தால் சில காலம் ஓய்வில் இருந்த நட்சத்திர வீரர்கள் பலர் தற்போது பூரண நலம் பெற்று சரியான உடல் தகுதியுடன் இருப்பதால் ஆசியக் கோப்பையை இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது .
இந்நிலையில் வரும் 30ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை தொடரில் இளம் வீரர்களை இந்திய அணி கோப்பையை வெல்லுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்) விராட் கோலி, சுப்மான் கில்,ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா
+ There are no comments
Add yours