இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் 35-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை துவம்சம் செய்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. சலாலா, அடுத்த ஆண்டு நடைபெறும் முதலாவது 5 பேர் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி சுற்றான ஆசிய மண்டல ஆண்கள் தொடர் ஓமன் நாட்டின் சலாலா நகரில் செவ்வாய்கிழமை தொடங்கியது.
இதில் பங்கேற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் நேற்று ஜப்பானுடன் மோதியது. இதில் ஆட்டம் முழுவதும் கோல் மழை பொழிந்த இந்திய அணி 35 கோல்கள் அடித்து அசத்தியது.
ஜப்பான் அணி வெறும் 1 கோல் மட்டுமே அடித்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 35-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை துவம்சம் செய்து வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சிங் மனிந்தர் 10 கோல்கள் அடித்து அசத்தினார். ரஹீல் முகமது 7 கோல்களும், ராஜ்பர் பவன் மற்றும் சிங் குர்ஜோத் தலா 5 கோல்களும் அடித்தனர். ஜப்பான் அணி தரப்பில் கோபோரி மஸட்டாகா மட்டும் ஒரு கோல் அடித்தார்.
லீக் சுற்று முடிவில் இந்திய அணி 5 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வி உடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதியில் இந்தியா உடன் மோதும் அணி இன்று தீர்மானிக்கப்பட உள்ளது.
+ There are no comments
Add yours