இன்று மும்பையில் இந்தியா கூட்டணி சார்பில் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் என 26 எதிர்க்கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டம் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அக்கட்சி தேசிய கவுன்சில் செயலர் பினோய் விஸ்வம் சேத்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியா கூட்டணி ஒரு சிறந்த மாற்றத்தை முன்னெடுத்து வருகிறது. மாற்றத்திற்காக இந்தியா (கூட்டணி) துணை நிற்கிறது.
பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியானது, தொழிலதிபர் அதானிக்கு தப்பிக்கும் வழிகளை ஏற்படுத்தி தருகிறது. ஆனால் நாங்கள் இந்திய மக்களுக்கு நல்ல வழியைக் கண்டுபிடித்து தர முயற்சித்து வருகிறது. என CPI தேசிய கவுன்சில் செயலாளர் பினோய் விஸ்வம் செய்தியாளர்களிடம் கூறினார்.
+ There are no comments
Add yours