இரண்டு தொகுதிகளில் பாஜக வெற்றி.. மற்ற தொகுதிகளின் முன்னிலை நிலவரம்!

Spread the love

கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற்ற 6 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், அதே போல காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணி ஆதரவிலும் இடைத்தேர்தல்களில் ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டு உள்ளனர்.

அதன்படி, திரிபுராவில் இரண்டு தொகுதிகள், மேற்கு வங்கம், கேரளா, உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி என 6 மாநிலங்களில் ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த நிலையில், 7 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றி நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

தன்பூர், போக்சா நகர் தொகுதி:

இதில், திரிபுரா மாநிலத்தின் தன்பூர், போக்சா நகர் ஆகிய 2 தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தன்பூர் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிகளின் மிகப்பெரிய தலைவரும் திரிபுரா மாநிலத்தின் ஐந்து முறை முதல்வருமான மாணிக் சர்க்காரின் தொகுதி ஆகும். இதுபோல் போக்சா நகர் சிறுபான்மையினர் அதிகம் உள்ள தொகுதியாகும். இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, போக்சா நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் டஃபஜல் ஹெசைன் 34,146 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் வேட்பாளர் மிசான் ஹெசைன் 3,909 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். தன்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிந்து தேவ்நாத் 30,017 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் கவுஷிக் 11,146 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

புதுப்பள்ளி தொகுதி:

கேரள மாநிலம் புதுப்பள்ளி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பளர் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் அபார வெற்றி பெற்றுள்ளார். 36,454 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜெய்க்சி தாமஸை தோற்கடித்தார் சாண்டி உம்மன். இடைத்தேர்தலில் சாண்டி உம்மன் 78.098 வாக்குகள், மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜெய்க்சி தாமஸ் 41,644 வாக்குகள், பாஜக வேட்பாளர் லிஜின் லால் 6,447 வாக்குகள் பெற்றனர்.

கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவை அடுத்து புதுப்பள்ளி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 12 முறை புதுப்பள்ளியில் வெற்றி பெற்ற உம்மன் சாண்டியை காட்டிலும் அவரது மகன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இன்னும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெற்றி குறித்த முடிவு வெளியிடவில்லை என்பது குறிப்பிடப்படுகிறது.

உத்தரபிரதேசம் – மேற்குவங்கம்:

உத்தரபிரதேசம் மாநிலம் கோஷி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுதாகர் சிங் முன்னிலை பெற்றுள்ளார். மேற்குவங்க மாநிலம் துப்குரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிர்மல் சந்திரா ராய் முன்னிலை பெற்றுள்ளார்.

உத்தரகாண்ட் – ஜார்கண்ட்:

உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வர் தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ சந்தன் ராம் தாஸ் மறைவால் அங்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் தற்போது, பாஜக சார்பில் தாஸின் மனைவி பார்வதி டாஸ் முன்னிலை பெற்றுள்ளார். மேலும், ஜார்கண்ட் மாநிலம் டும்ரி தொகுதியில் NDA ஆதரவுடன் அனைத்து மாணவர் சங்கத்தின் சார்பில் (AJSU Party) யசோதா தேவி முன்னிலை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours