சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இருந்து பாஜகவின் ‘பரிவர்தன் யாத்திரை’ தொடங்கியது..!

Spread the love

நாடாளுமன்ற தேர்தல் ஆனது நெருங்கி வரும் நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இருந்து பாஜகவின் வெகுஜன பிரச்சாரமான ‘பரிவர்தன் யாத்திரை’ தொடங்கியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சத்தீஸ்கரில் உள்ள பஸ்தாரின் பழங்குடி மாவட்டமான தண்டேவாடாவில் இருந்து செப்டம்பர் 12ம் தேதி தொடங்க உள்ளார்.

பரிவர்தன் யாத்திரையை கொடியசைத்து தொடங்குவதற்கு முன், அமித்ஷா தண்டேவாடா மாவட்டத் தலைமையகத்தில் உள்ள சுவாமி தண்டேஸ்வரிக்கு வணக்கம் செலுத்த உள்ளார். இந்த யாத்திரை 16 நாட்களில் 1728 கிமீ தூரத்தை கடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது ‘பரிவர்தன் யாத்திரை’யை வடக்கு சத்தீஸ்கரில் உள்ள ஜாஷ்பூரில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா செப்டம்பர் 15ம் தேதி தொடங்க உள்ளார்.

நட்டா யாத்திரையை கொடியசைத்து தொடங்கும் முன் ஜாஷ்பூர் மாவட்ட தலைமையகத்தில் உள்ள சுவாமி குடியா ராணி கோவிலில் பூஜை செய்ய உள்ளார். இந்த இரண்டாவது யாத்திரை 12 நாட்களில் 1261 கிமீ தூரத்தை கடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு யாத்திரைகளும் செப்டம்பர் 28 அன்று பிலாஸ்பூரில் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இரண்டு யாத்திரைகளின் போதும் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2013ம் ஆண்டு மே 25 அன்று பஸ்தரில் உள்ள ஜீரம்காட்டியில் காங்கிரஸின் ‘பரிவர்தன் யாத்திரை’-யில் தாக்குதல் நடைபெற்றது. இதில் 28 காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நான்கு பாதுகாப்புப் படையினர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours