கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடு திரும்ப இருந்த நிலையில் விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் 18 வது ஜி 20 மாநாடு செப்டம்பர் 9-10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்,அமெரிக்கா, எகிப்து ,கனடா, சீனா உள்ளிட்ட 20 நாடுகளுக்கும் மேற்பட்ட தலைவா்கள் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் ஜி 20 மாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் பல்வேறு துறைகளில் இந்தியா-கனடா உறவுகள் குறித்து விவாதித்தனர்.
இதனை தொடர்ந்து உச்சி மாநாடு நிறைவு பெற்றதையடுத்து அவர் நாடு திரும்ப வேண்டிய விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கனடா பிரதமரின் வருகைக்காக பாதுகாப்பு படையினர் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் அவர் செல்ல வேண்டிய CFC001 விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனை ஒரே நாள் இரவில் சரி செய்து விட முடியாது என்பதால் மாற்று ஏற்பாடு வரும் வரையில் கனட பிரதமரின் குழுவினர் இந்தியாவில் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours