அமராவதி: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு செப்.22 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்த போது, ஆந்திரா திறன் மேம்பாட்டுக் கழகத்தில்ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதன் பேரில், ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்திபாலா டவுன் பகுதியில் உள்ள ஆர்கே ஹாலில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடுவிடம் பொருளாதார குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்பி தனஞ்செயநாயுடு அளித்த நோட்டீஸில், ஜாமீனில் வெளிவர இயலாத சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஆந்திரா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு செப்.22 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தனது 45 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாக ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறைக்கு செல்கிறார். 14 ஆண்டுகள் ஆந்திர முதல்வராகவும், 15 ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராகவும் சந்திரபாபு நாயுடு இருந்துள்ளார்.
மேலும் சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பேரணி, கொண்டாட்டங்கள், கூட்டமாக சேர்வது போன்றவற்றிக்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours