திருப்பதி மலைப்பாதையில் மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அலறியடித்து ஓடும் சம்பவம் நடைபெற்று வந்தது.
முன்று நாட்களுக்கு முன்னர் ஒரு சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு சிறுத்தை திருப்பதி மலைப்பாதையில் உலாவி வருவதாக பக்தர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
தற்போது லட்சுமி நரசிம்ம சாமி கோயில் அருகே வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
திருப்பதியில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுத்தை தாக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours