டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்தார். விருந்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துள்ளார். அந்த புகைபடம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள உலகத் தலைவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்தார்.விருந்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் மிக சுவையான 500 உணவுகளை தேர்வு செய்து, பங்கேற்ற தலைவர்களுக்கு அளிக்கப்பட்டது. விருந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார். அப்போது இருவரும் கைகுலுக்கிய போது, முதல்வர் ஸ்டாலினை அமெரிக்க அதிபர் பைடனுக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தாகக் கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours