தேசிய பாதுகாப்பிற்கான அனைத்து அம்சங்களையும் பலப்படுத்துவதன் மூலம் தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் நடைபெறும் தேசிய பாதுகாப்பு வியூகங்கள் குறித்த மாநாட்டினை மத்திய உள்துறை அமைச்சர் புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
நேரடி மற்றும் மெய்நிகர் முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் 750க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள்,வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.
முன்னதாக அமித் ஷா, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முதல் நாள் மாநாட்டில் பாதுகாப்பு தொடர்பான பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
தீவிரவாதம், போதைப்பொருள்களுக்கான நிதியுதவி, அணு மற்றும் கதிரியக்க அவசரநிலைகளுக்கான தயார்நிலை, சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.
தேசிய பாதுகாப்பை நிர்வகிப்பதில் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் முக்கிய பங்கை அறிவுறுத்திய அவர் போதைப்பொருளை கையாள்வதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
மாநாட்டின் நிறைவு நாளான ஆகஸ்ட் 25 அன்று அமைச்சர் அமித் ஷா மாநாட்டில் உரையாற்றுகிறார்.
+ There are no comments
Add yours