வெற்றிக்கரமாக குறைக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம்… இஸ்ரோ அறிவிப்பு

Spread the love

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தின் உயரம் மேலும் குறைக்கப்பட்டுள்ளது நிலவை சந்திரயான் 3 நெருங்குவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சமீபத்தில் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 நிலவுக்கு அருகே 100 கிலோ மீட்டர் பாதைக்குள் செலுத்தும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் பயணித்து வருகிறது. அதன் சுற்றுப்பாதை தொலைவை படிப்படியாக குறைத்து விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே 3 முறை குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 153×163 கி.மீ-ஆக நிலவின் சுற்றுவட்டப்பாதை உயரம் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தகட்டமாக நிலவின் தரைப்பகுதிக்கும், விண்கலத்துக்குமான தூரத்தை 100 கி.மீ. ஆக குறைக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து உந்து கலனில் இருந்து லேண்டர் சாதனம் விடுவிக்கப்பட்டு, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23- ஆம் தேதி நிலவில் அது தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours