சந்திரயான்- 3 திட்டம் முழு உலகிற்கும் பயன் அளிக்கும் என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரம்ம குமாரிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் தாதி பிரகாஷ் மணியின் நினைவு தபால் தலையை அவர் வெளியிட்டார்.
குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு, பிரம்ம குமாரிகள் அமைப்பு உலகின் மிகப்பெரிய பெண்கள் தலைமையிலான ஆன்மிக அமைப்பாக மாறியுள்ளது என்றார்.
சந்திரயான் 3 திட்டம் மூலம் நமது விஞ்ஞானிகள் முன் எப்போதும் இல்லாத வெற்றியை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டத்தின் மூலம் நிலவு குறித்த பல்வேறு தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் திரவுபதி முர்மு தெரிவித்தார்
+ There are no comments
Add yours