குமாரசாமி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு ஜெய்நகரில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் குமாரசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,நேற்று குமாரசாமி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அப்போது அவர் மிகவும் பலவீனமாகவும், அசௌகரியத்துடன் இருந்தார். உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்ட்டது. சிகிச்சைக்கு குமாரசாமி நன்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.
குமாரசாமி உடல்நிலை சீராக உள்ளது. அவரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours