வீட்டுப் பயன்பாட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் உஜ்வலா திட்டத்தின் கீழ், பயன்பெறுவோருக்கு சிலிண்டர் ஒன்றுக்கு 400 ரூபாய் சேமிக்க இயலும் என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியளார்களிடம் பேசிய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் மேலும் 75 இலட்சம் உஜ்வலா இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதகாவும் அமைச்சர் கூறினார்.
பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் சந்திரயான் விண்கலத்தின் வெற்றிக்காக இஸ்ரோ அறிவியலாளருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
+ There are no comments
Add yours