உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண முன்னாள் கிாிக்கெட் வீரா் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ தலைமை செயலாளர் ஜெய் ஷா ‘கோல்டன் டிக்கெட்’ வழங்கியுள்ளார்.
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிசிசிஐ இந்தியாவின் தலைசிறந்த நட்சத்திரங்களுக்கு உலகக்கோப்பை போட்டிகளை நேரில் காண கோல்டன் டிக்கெட் வழங்கி வருகிறது.
அதன்படி பிசிசிஐ தலைமை செயலாளர் ஜெய் ஷா உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கி உள்ளார் .
+ There are no comments
Add yours