இன்று இந்தியா முழுக்க இந்தி தினமான ‘இந்தி திவாஸ்’ கொண்டாடப்படுகிறது. இந்த இந்தி நிவாஸ் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹிந்தி பற்றிய பல்வேறு கருத்துக்களையும் அதன் பயன்கள் என சமூக வலைத்தளமான X தளத்தில் வீடியோ வாயிலாக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.
அதில் அவர் பேசுகையில், இந்தி மொழி இந்தியாவில் உள்ள எந்த மொழிகளு டனும் போட்டியிட்டதில்லை. ஹிந்தி போட்டியிட போவதுமில்லை. மாநிலத்தின் அனைத்து மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலம் ஒரு வலுவான நாடு உருவாகும் என்றும் கூறினார். அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் அதிகாரம் அளிக்கும் மையமாக இந்தி மாறும்.
இந்தியா பல்வேறு மொழிகளின் நாடாக இருந்து வருகிறது. இந்திய மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒன்றிணைக்கிறது. இந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது. இது பல்வேறு இந்திய மொழிகள் மற்றும் பல உலகளாவிய மொழிகளைக் கௌரவித்துள்ளது. அவற்றின் சொற்களஞ்சியம், வாக்கியங்கள் மற்றும் இலக்கண விதிகளை ஹிந்தி ஏற்றுக்கொண்டுள்ளது.
சுதந்திரப் போராட்டத்தின் கடினமான காலங்களில் நாட்டை ஒன்றிணைப்பதில் இந்தி மொழி மிக முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தி, தகவல் தொடர்பு மொழியாக, இருந்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தை கிழக்கிலிருந்து மேற்காகவும், வடக்கிலிருந்து தெற்காகவும் முன்னெடுத்துச் செல்வதில் இந்தி முக்கியப் பங்காற்றியுள்ளது. 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டக் கலைஞர்களால் இந்தி மொழி அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய மற்றும் உலகளாவிய மையங்களில் இந்திய மொழிகளுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுப் பணிகளில் இந்தி மொழிப் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை தயாரித்து குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கும் பொறுப்பு தற்போது அலுவல் மொழி அமலாக்கக் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பல்வேறு பகுதிகளில் அலுவல் மொழியின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான சூழலை கண்டறிந்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 528 நகர அலுவல் மொழி அமலாக்கக் குழுக்கள் (TOLICs) அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஹிந்தி நிவாஸ் தினத்தை முன்னிட்டு வீடியோ மூலம் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours