உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய நட்சத்திர வீரர் எச்.எஸ்.பிரனாய் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் ஹோபன்ஹேகனில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி சுற்று ஆட்டத்தில் எச்.எஸ்.பிரனாய், டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென்னை எதிர்கொண்டார்.
விறுவிறப்பான இந்த ஆட்டத்தில் பிரனாய் 13-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் விக்டரை வீழ்த்தி அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
அதேநேரத்தில், முன்னதாக இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி இணை டென்மார்க்கின் கிம் ஆஸ்ட்ரப்- ஆன்டர்ஸ் ஸ்காரப் ரஸ்முசென் இணையிடம் 18-21, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
You May Also Like
பிரியங்கா, ராகுல் இன்று வயநாட்டில் பிரச்சாரம் !
November 3, 2024
அமித்ஷாவை குற்றம் சாட்டிய கனடா- இந்தியா கண்டனம்
November 2, 2024
ஸ்பெயின் கனமழை-உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக உயர்வு !
November 2, 2024
More From Author
நாளை பேடி எம் ஃபாஸ்டேக்கிற்கு கடைசி – அடுத்து என்ன?
March 14, 2024
இபிஎஸ்-க்கு எதிராக திமுக மானநஷ்ட ஈடு வழக்கு!
March 14, 2024
+ There are no comments
Add yours