காவிரியில் இருந்து அதிகரித்த நீர்வரத்து…

Spread the love

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிக்குண்டுக்கு நீர்வரத்து நொடிக்கு 14 ஆயிரம் கன அடியிலிருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து நேற்று மாலை நிலவரப்படி நொடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லையான பிலிக்குண்டுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை முதல் 15 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியவுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதை அடுத்து இன்று நான்காவது நாளாகப் பரிசல் இயக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துப் பாய்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours