அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த சுமார் 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி தான் இந்தியா கூட்டணி. இந்த இந்தியா கூட்டணியின் சின்னம் ஆக.31ம் தேதி அறிவிக்கப்படும் என்று சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மும்பையில் கூடும்போது கூட்டணியின் சின்னம் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒருங்கிணைப்பில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து “இந்தியா” என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தை பீகார் மாநிலம் பாட்னாவில் நடத்தினார் நிதிஷ்குமார். இதன்பின்னர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 2-வது கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு “இந்தியா” கூட்டணி என பெயரிடப்பட்டது.
இதனைதொடர்ந்து, “இந்தியா” கூட்டணியின் 3-வது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது. வரும் 31 மற்றும் செப்டமப்ர் 1-ம் தேதி நடைபெறும் மும்பை இரண்டு நாள் கூட்டத்தில் “இந்தியா” கூட்டணி கட்சிகள் முக்கிய முடிவுகளை அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அந்த சமயத்தில் இந்தியா கூட்டணியின் சின்னம் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours